கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் கொரோனா பரவல் காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுத்தல் தொடர்பாக நாடுகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவில் பேணப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்த இலங்கையின் நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுதல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பதில் பொலிஸ்மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பதன் அடிப்படையில், எவராவது கைது செய்யப்பட்டால் அது அரசியல் யாப்புக்கு எதிரான செயற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இப்பிராந்திய நாடுகளில் ஏற்கனவே பொய்யான செய்திகள், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் சட்டங்கள் காணப்படுகின்றன.
எனினும் அவை அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான முறையான பேச்சுகள், விமர்சனங்கள் ஆகியவற்றை தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் சட்டபூர்வமான தன்மை, தேவை, சட்டம் ஆகிய கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸினை அடுத்து அரசாங்கத்தின் பதிலை விமர்சிக்கும் நபர்களை தன்னிச்சையாக கைதுசெய்து தடுத்து வைப்பது அல்லது தொற்று பற்றிய தகவல்கள் அல்லது கருத்துக்களைப் பகிர்வது ஆகியவற்றினை மேலும் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
அந்தவகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அல்லது தவறான தகவல்களை பரப்பியதாக பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நிலையற்ற காலகட்டத்தில் தவறான தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்தற்கு அரசங்கம் நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




