மிதிவண்டி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பரிஸில் அதிகரிப்பு!!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மிதிவண்டி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

வாடகை மிதிவண்டி வழங்குனர்களான வாலிப் (Vélib) நிறுவனம் அண்மைய புள்ளிவிபரங்களை மதிப்பிட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கொவிட்-10 முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் மட்டும் மேலதிகமாக 50,000 சந்தாதாரர்கள் புதிதாக இணைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், அவர்கள் அனைவரும் வருடாந்த சந்தா தாரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிதிவண்டிகள் வாடகைக்குச் செல்வது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 120 இல் இருந்து 140 வரை மேலதிகமாக புதிய மிதிவண்டிகளை சேவைக்கு கொண்டுவருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 63,918 தடவைகள் பயன்படுத்தப்பட்ட வாலிப் சேவை, 2020ஆம் ஆண்டில் 127,677 வரை நாள் ஒன்றுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.