மட். பாசிக்குடாவில் விபத்து - ஒருவர் பலி!!

மட்டக்களப்பு பாசிக்குடா வீதி பேத்தாழையில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சோ்ந்த எம்.என்.முகம்மது நைறுாஸ் வயது (18) என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
குறித்த இளைஞன் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து பாசிக்குடாவிற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிரே சென்ற சிறிய கென்ரர் ரக வாகனம் சடுதியாக வீதியை விட்டு மறு பக்கம் செல்ல முற்படுகையில் பின்னால் சென்றவா் தமது வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளார்.
எனினும் விபத்தில் கென்ரா் வாகனத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த கல்குடா பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் கென்ரா் சாரதியை கைது செய்துள்ளனர்.
அத்துடன் கென்ரரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பலியான இளைஞரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.