பத்மநாபாவின் 30 ஆண்டு தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு!!
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர் நீர்த்த தோழர் பத்மநாபா உட்பட ஏனைய அனைத்து தியாகிகளின் 30ஆவது ஆண்டு தியாகிகள் தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது
ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தலைமையில் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பத்மநாபா மன்றத்தின் தலைமை காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், கோவிந்தன் கருணாகரன் (ஜனா), ஞானப்பிரகாசம் மற்றும் முன்னாள் மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார பிரசன்னா, புளொட் அமைப்பின் மட்டு இணைப்பாளர் கேசவன் உட்பட பத்மநாபா மன்றத்தின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்விற்கு வருகை தந்தவர்கள், பத்மநாபாவின் திருவுருவப் படத்திற்கும், தியாகிகளுக்குமாக மலர்மாலை அணிந்து ஈகச்சுடர் ஏற்றி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அனுஷ்டித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




