இலங்கையில் 70 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள்!!
இலங்கையில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று (புதன்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 2,086 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவே நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான பரிசோதனை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த மாதம் 22 ஆம் திகதியன்று ஆகக்கூடுதலாக 1,970 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 209 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




