கருணா 3000 இராணுவத்தினரை கொலை செய்யவில்லை - சரத் பொன்சேகா!!

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் கொலை செய்தார் என்பது உண்மை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் தெரிவித்திருப்பது போன்று ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் 3000 இராணுவத்தினரை அவர் கொலை செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனையிறவு முகாமினை ஒரே இரவில் தொடர் தாக்குதல்களினால் கைப்பற்றிய போது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்று குவித்தோம் என அண்மையில் கருணா அம்மான் தெரிவித்தமை தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்தேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர் பெரும் வீரராக முயல்கின்றார். ஆனால் அவர் சரணடைந்த வீரர்களையே கொலை செய்தார் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரனமுன கருணாவிற்கு பதவி வழங்கியுள்ளது. அரசாங்கம் அவரை காப்பாற்றுகின்றது எனவும் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருணாவை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் சரத்பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.