கருணா வெளியிட்ட கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது – எஸ்.பி. திஸாநாயக்க!!
கருணா அம்மான் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது, அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கொத்மலை நவதிஸ்பனை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்” தீர்க்கமான கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்து எமது இராணுவத்துடன் இணைந்துகொண்டார். இதனால் கிழக்கு மாகாணத்தை விரைந்து கைப்பற்றக்கூடியதாக இருந்தது. தொப்பிகல போன்ற தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். அதன்பின்னரே அரசாங்கத்துடன் இணைந்தார்.
சட்டத்தின் முன், அரச சாட்சியாகமாறி இழைத்த தவறிலிருந்து விடுதலையாவதற்கு எந்தவொரு நபருக்கும் முடியும். கருணா அம்மான் இழைத்த தவறுகளில் இருந்து அவரை விடுவிப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை. ஆனால், தீர்க்கமான கட்டத்தில், தீர்க்கமான ஒத்துழைப்பை வழங்கினார்.
கருணா அம்மானின் கருத்தானது மிலேச்சத்தனமானது. அப்படியொரு கருத்தை அவர் வெளியிட்டிருக்கக்கூடாது. அந்த கருத்தை அனுமதிக்கமாட்டோம்.
இதற்காக கருணா கவலையடையவேண்டும். வேதனை அனுபவிக்கவேண்டும். அவரின் கூற்றை கண்டிக்கின்றேன். கடும் அதிருப்தியையும் வெளியிடுகின்றேன்.”என்றார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo