அமெரிக்கத் தூதரக பெண் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டார்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை நிராகரித்த நாட்டிற்குள் நுழைந்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளது.
குறித்த பெண் அதிகாரி டுபாயிலிருந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனையை செய்ய மறுப்பு தெரிவித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.