புதியவர்களுக்கு இடமளித்து வயதானவர்கள் ஓய்வு பெறுவது சிறந்தது - சந்திரிகா!!

உடல் நல குறைவுடன் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் தலைவர்கள், புதியவர்களுக்கு இடமளித்து, ஓய்வுபெற்று சென்றால்தான் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஹொரவப்பொத்தனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தான் பலவந்தமாகவே மீண்டும் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டதாகவும்,
தங்களை அரசியல்வாதிகள் எனக்கூறிக்கொண்டு நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பெரும்பாலானோர் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற பாதையை நோக்கி கொண்டுச்செல்ல மாட்டார்கள் என்பதை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் புரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே நாடாளுமன்றத்திற்குள் நுழைகின்றதாகவும் இத்தகையானவர்களுடன் அரசியலில் ஈடுபட தான் விரும்பவில்லை எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போது உடல் நல குறைவுடன்அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் தலைவர்கள், ஓய்வுப்பெற்று புதியவர்களுக்கு இடமளிப்பார்களாயின் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.