இலங்கை வான் பரப்பில் பறக்கும் ரகசிய வானூர்தி!

ஹோமாகமை வான் பரப்பில் பறக்கும் தட்டையான இரகசியமான வானூர்தி ஒன்று பறந்ததை மருத்துவ மாணவர்கள் சிலர் அவதானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோமாகமை – பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 10 மருத்துவ மாணவர்கள் கடந்த 4ஆம் திகதி இரவு 7.30 அளவில் இந்த வானூர்தி பறப்பதை தெளிவாக அவதானித்துள்ளனர்.
சிகப்பு நிறமான இந்த வானூர்தி வித்தியாசமான ஒளியுடன் பறந்துச் சென்றதாகவும், அது தட்டு வடிவத்தில் இருந்ததை தெளிவாக காணக் கூடியதாக இருந்தது அவர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த வானூர்தியானது சுமார் 10 விநாடிகள் ஒரே இடத்தில் அசையாமல் காணப்பட்டதாகவும், அது செய்மதி போன்றது, சாதாரணமான வானூர்தி அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரம் ஒரே இடத்தில் காணப்பட்ட அந்த வானூர்தி பின்னர் வடகிழக்கு திசையில் பறந்து சென்றதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தட்டு போன்ற வடிவம் கொண்ட இந்த வானூர்தி வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த வானூர்தியாக இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.