சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்!!
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை சுரக்ஷா காப்புறுதி திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், உரிய முறையில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து வலயக்கல்வி காரியாலயம் அல்லது கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு அந்த அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு 011 2784163, 011 2784872 அல்லது 011 3641555 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் ஊடாக மாணவர்களின் அவசர சிகிச்சை, பெற்றோர்களின் உயிரிழப்பு போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் காப்புறுதியின் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறும் போதும் காப்புறுதியின் பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




