சுவிட்சர்லாந்து இத்தாலி எல்லையை இப்போதைக்கு திறக்கப்போவதில்லை என அறிவிப்பு!!
சுவிட்சர்லாந்துடன் கலந்தாலோசிக்காமலே, ஜூன் 3ஆம் திகதி (இன்று) தனது எல்லைகளை திறக்கப்போவதாக இத்தாலி தன்னிச்சையாக அறிவித்தது.
இந்நிலையில் சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,
இத்தாலியின் முடிவு தங்கள் முடிவை மாற்றப்போவதில்லை என்றும், சுவிஸ் இத்தாலி எல்லை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சுவிஸ் மக்கள் இத்தாலிக்குள் எல்லை தாண்டி அனுமதிக்கப்பட்டாலும், இத்தாலியிலிருந்து வரும் யாரும் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
சுவிட்சர்லாந்துக்குள் நுழைய இத்தாலியர்களில் யாருக்கு அனுமதி என்றால், சுவிட்சர்லாந்தில் பணிபுரிய G- உரிமம் வைத்திருப்போர், சுவிஸ் குடியுரிமை அல்லது சுவிஸ் வாழிட உரிமம் வைத்திருப்போருக்கு மட்டுமே உண்டு.
இதற்கிடையில், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவுடனான எல்லைகளை சுவிட்சர்லாந்து ஜூன் மாதம் 15ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளது.
இத்தாலியுடனான எல்லைகளைத் திறப்பது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றாலும், மற்ற நாடுகளுடனான எல்லைகளை திறக்கும் அதே ஜூன் 15 அன்றே இத்தாலியுடனான எல்லைகளையும் திறக்கலாம் என தாங்கள் நம்புவதாக பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று என்பதும், ஐரோப்பாவிலேயே கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இரண்டாவது நாடு அது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




