அப்போதாவது உணருமா ஈழத்தமிழினம்...?
தமிழினம் கற்றுத்தேற வேண்டுமெனின் சுமந்திரனும் இம்முறை வெல்லவேண்டும்...
யூதர்கள்; யேர்மனியில் மட்டுமா நாட்டுவிட்டுத் துரத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும் அழிக்கப்பட்டார்கள்...? இல்லை.
1890 இலிருந்து யூதர்களின் மீதான அடக்குமுறை நீள்கிறது. போர்த்துக்கல்லில், இசுப்பெயினில், உக்ரைனில், செக்கோவில், என முழு ஐரோப்பாவிலிருந்தும் யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் யேர்மனியிலிருந்து அவர்கள் ஒட்டுமொத்தமாக விரட்டப்பட்டு அழிக்கப்பட்ட பின்புதான் "எமக்கொரு நாடில்லையே" என்பது புத்தியில் உறைத்தது. ஏறக்குறைய 60 ஆண்டுகளின் பின் யேர்மனி கற்றுத் தந்த பாடமே அவர்களைச் சிந்திக்க வைத்தது. எல்லா நாடுகளிலிருந்தும் அவர்கள் விரட்டப்பட்ட போதும் யேர்மனி அப்படிச் செய்யாது என நம்பியிருந்தவர்களுக்கான மோசமான புதைகுழியாக யேர்மனி மாறியது.
அவ்வாறுதான் ஈழத்தமிழர் நிலையும் இன்று மண்டியிட்டு நிற்கிறது. ரவிராஜ் இற்கு வழங்கப்பட்ட மாமனிதர் என்ற மதிப்பளிப்பைக் காவு கொண்டுபோய், இலங்கை இனப்படுகொலை அரசை வலுப்படுத்தும் செயல்களில் இறங்கியிருக்கிறது கூட்டமைப்பு. ஐரோப்பிய நாடுகளிலிருந்து யூதர்கள் விரட்டப்பட்டபோது, அதற்கு ஆதரவாக அமைதியாக இருந்த யேர்மனிய யூதர்களைப்போல; உண்மையறிந்த பின்னரும் பலர் கூட்டமைப்பையும் சுமந்திரனையும் நம்பிக் கிடக்கிறார்கள். இவர்கள் சிங்கள அரசாலும் சுமந்திரன் அணியாலும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டால் மட்டுமே அதனூடான கற்பிதத்தின் மூலமாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்னவென்பதைப் பலர் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.
ஆதலால் சுமந்திரன் வென்று, இனப்படுகொலை இலங்கையில் நடைபெறவில்லை என்பதை நிரூபித்து, தமிழ்த்தேசியத்தைப்பின்பற்றுவோர் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படவேண்டும்.
அப்போதாவது உணருமா ஈழத்தமிழினம்...?!!
-தேவன்