ஒரே இரவில் மில்லியனரான தன்சானிய சுரங்கத் தொழிலாளர்!
தன்சானியாவில் ஒரு சிறிய சுரங்கத் தொழிலாளி, இரண்டு கரடுமுரடான தன்சானைட் கற்களை விற்ற பிறகு ஒரே இரவில் மில்லியனராகிவிட்டார்.
15 கிலோகிராம் எடையுள்ள இரத்தினக் கற்களுக்காக, நாட்டின் சுரங்க அமைச்சகத்திலிருந்து சானினியு லைசர் என்பவர் 2.4 மில்லியன் பவுண்டுகள் (3.4 மில்லியன் டொலர்கள்) சம்பாதித்துள்ளார். இது நாட்டில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய தன்சானைட் கல் என கூறப்படுகின்றது.
இதுகுறித்து 30 இற்க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தந்தை லைசர் கூறுகையில், ‘நாளை ஒரு பெரிய விருந்து இருக்கும்’ என கூறினார்.
டான்சானைட் வடக்கு தான்சானியாவில் மட்டுமே காணப்படுகிறது மற்றும் இது ஆபரணங்களை தயாரிக்க பயன்படுகின்றது.
டான்சானைட் வடக்கு தான்சானியாவில் மட்டுமே காணப்படுகிறது மற்றும் இது ஆபரணங்களை தயாரிக்க பயன்படுகின்றது.
இது பூமியில் உள்ள மிக அரிதான இரத்தினக் கற்களில் ஒன்றாகும், மேலும் ஒரு உள்ளூர் புவியியலாளர் அடுத்த 20 ஆண்டுகளில் அதன் வழங்கல் முற்றிலுமாக குறைந்துவிடும் என்று மதிப்பிட்டுள்ளார்.
விலைமதிப்பற்ற தன்சானைட் கல், பச்சை, சிவப்பு, ஊதா மற்றும் நீலம் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் உள்ளது.
தன்சானைட் கல் அரிதானது என்பதன் மூலம் அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. சிறந்த நிறம் அல்லது தெளிவு ஆகிய காரணங்களை கொண்டு விலை நிர்ணயிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo