மரக்கறி தோட்டமாகியது தேராவில் துயிலுமில்லம்!!

தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தை வனவளத்திணைக்களத்தின் மூலம் எல்லையிட்டு, இராணுவம் மரக்கறிச் செய்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எம்மக்களுக்காய் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் அரசு தடுக்க நினைப்பதனால் துயிலுமில்லத்தில் இவ்வாறு இராணுவத்தினர் மரக்கறிச் செய்கையில் ஈடுபடுவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார் .
ஆனால், வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட ஏனைய பகுதிகளில் தமிழ் மக்கள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்படாமல் விரட்டப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் வனவளத்திணைக்களத்தினால் எல்லையிட்டும் அடாத்தாக பிடித்தும் துயிலும் இல்ல வளாகத்தினுள் இராணுவத்தினரால் மரக்கறிப்பயிர்ச் செய்கை செய்யப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று துயிலும் இல்லத்தை பார்வையிடச் சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் வித்துடல்கள் இங்கு விதைக்கப் பட்டிருக்கிறது. யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் 2015 ஆண்டிற்கு பின் இவ்விடத்தில் தங்கள் பிள்ளைகளை இவ்விடத்தில் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இது தற்போது ஒரு அரச காரணியாக இது இருக்கிறது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 101ஆம் இலக்கத்தை உடைய இந்த பகுதி அரச காணியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
காணியை வனவளத்திணைக்களம் தன்னுடைய அடையாளப்படுத்துவதாக இருந்தால் கிராம அலுவலர் பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதியுடனே இவ்விடத்தில் அடையாளப்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.