திங்கள் முதல் அனைத்து மாவட்டங்கள் இடையேயும் போக்குவரத்துக்கு அனுமதி!!
கொழும்பு, கம்பஹா உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் கடந்த மே 26ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போதும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சுகாதார அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து வரும் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போதுள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




