எம்.சீ.சீ. உடன்படிக்கையை எதிர்க்கும் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை- விமல்!!
அமெரிக்காவுடனான எம்.சீ.சீ உடன்படிக்கையில் கைச்சாத்திடும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
எம்.சீ.சீ அல்ல வேறு பெயரில் வந்தாலும் உடன்படிக்கையை எதிர்க்கும் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலாக, நாட்டின் நீதித்துறைக்கு பொறுப்புக் கூறாத மற்றும் இலங்கை சட்டத்தை மீறி செல்லும் நிலைமையை உருவாக்கும் உடன்படிக்கை எந்த பெயரில் கொண்டு வரப்பட்டாலும் அதனை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo