திருகோணமலையில் விபத்து - சாரதி பலி!!

திருகோணமலை - ஹொரவபொத்தானை பிரதான வீதி, வில்கம் விகாரை பகுதியில் இன்று (03) காலை பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதி பலியாகியுள்ளார்.


பாரவூர்தியின் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாரவூர்தி , அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்துக்கொண்டிருந்த போது, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், 33 வயதான கண்டி-கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சந்துன் விக்ரமசிங்க என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.