சீனப் பெருஞ்சுவரை உடைப்போம் - பார்த்திபன் டுவிட்டால் பரபரப்பு!!

இந்திய-சீன எல்லையான லடாக் அருகில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய சீன ராணுவ வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் இருந்து 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பது குறிப்பிடத்தக்கது. சீனா தரப்பில் 35 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இந்த நிலையில் சீனாவின் அத்துமீறிய தாக்குதல்களை அடுத்து சீனா மீது கடும் கோபத்தில் இருக்கும் இந்தியர்கள் இனிமேல் சீன பொருட்களை வாங்கக் கூடாது என சமூக வலைதளங்கள் மூலம் உறுதி எடுத்து வருகின்றனர் மேலும் சீன செயலியான டிக்டாக் உள்பட எந்த செயலியையும் பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி பல வணிகர் சங்கங்களும் சீனப் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய வர்த்தக சந்தை இந்தியாவாக இருக்கும் நிலையில் சீனாவின் பொருட்களை முழுமையாக இந்தியா தவிர்த்தால் சீனா நெருக்கடிக்கு தள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய ராணுவ வீரர் பழனி மற்றும் 19 பேருக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குவதை தவிர்த்து சீன (வர்த்தக) பெருஞ்சுவரை உடைப்போம் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பார்த்திபனின் இந்த பதிவுக்கு இயக்குனர் சேரன் பதிலளிக்கையில், ‘நான் சீனாவின் திரைப்படங்கள்கூட பார்ப்பதில்லை சார்’ என்று கூறியுள்ளார்.

amilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.