நடிகை சாயிஷா கர்ப்பமா - அவரே வெளியிட்ட விளக்கம்!!

பிரபல நடிகர் ஆர்யாவை நடிகை சாயிஷா கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அவர் தமிழில் ’டெடி’ என்ற திரைப்படத்திலும் கன்னடத்தில் ’யுவரத்னா’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லாக்டவுன் காரணமாக இந்த படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும், லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படங்களின் படப்பிடிப்புகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சமீபத்தில் சாயிஷா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவை வைத்து சமூக வலைதள பயனாளர்கள் சிலர் சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக வதந்திகளை பரப்பி விட்டனர். பொதுவாக மிக வேகமாக நடனமாடும் சாயிஷா கடந்த சில நாட்களாக மெதுவான அசைவுடன் கூடிய நடனத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்றும், அவர் தொளதொள ஆடைகளை மட்டுமே சமீபகாலமாக அணிவதாகவும் வதந்தி பரப்புபவர்கள் காரணமாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இதற்கு சாயிஷா விளக்கம் அளித்துள்ளார். தான் கர்ப்பமாக இல்லை என்றும் தற்போது கொரோனா வைரஸ் லாக்டோன் முடிந்தவுடன் ’யுவரத்னா என்ற படத்தில் நடனம் ஆடுவதற்காக பயிற்சி பெற்று வருவதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த பாடலின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க மியுசிக் வீடியோ ஒன்றில் நடிப்பதற்காக சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சாயிஷா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சாயிஷா கர்ப்பம் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.