அமெரிக்காவை மறைமுகமாக மிரட்டும் அல்கொய்தா!!

அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அல்கொய்தா அமைப்பினர் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளநிலையில், ‘ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக இருப்போம்’ என அமெரிக்காவை அல்கொய்தா மறைமுகமாக மிரட்டியுள்ளது.


ஜிஹாதி குழுவினரான அல்கொய்தா அமைப்பினரின் இணைய பத்திரிகையான ஒன் உம்மாவின் ஆங்கில பதிப்பில்,

ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்க வீதிகளில் போராடி கொண்டிருப்பவர்களுக்கு தானாக முன்வந்து ஆதரவளிக்குமாறு கோரும் விதத்தில், உயிரிழந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் கடைசி நிமிடங்களை சுட்டிக்காட்டும் படமும், பிரபல சுவர் ஓவியரான பேங்க்சியின் ஓவியமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அதில் வெளியாகியுள்ள கட்டுரையில், ‘அமெரிக்க அரசு இனவெறிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. இதனால் விரைவில், அமெரிக்காவும் அதன் அரசியல் தலைமைகளும் பொருளாதார அமைப்புகளும் அழிந்துவிடும்.

அமெரிக்காவெங்கும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் மற்றும் உள்நாட்டு போர் ஆகியவை நடக்க வாய்ப்பு உள்ளது. ஜனநாயக கட்சியினர்கூட அமெரிக்கர்களுக்கு உதவ முடியாது. ஆனால், நாங்கள் உதவுவோம். நாங்கள் எப்போதும் ‘ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக’ இருப்போம்’ என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களை முதலாக கொண்டு, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாதவர்களை அல்கொய்தா அமைப்பினர் அணுகி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.