உளவு பார்த்ததாக கனேடியர்கள் மீது சீனா குற்றச்சாட்டு!

18 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்கள் மீது, சீனா உளவு பார்த்ததாக குற்றம் சாட்டியுள்ளது.


முன்னாள் இராஜதந்திரி மைக்கேல் கோவ்ரிக் (Michael Kovrig) மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பேவர் (Michael Spavor) ஆகியோர் டிசம்பர் 2018ஆம் ஆண்டு முதல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுப்ரீம் பீப்பிள்ஸ் ப்ரொகுரேட்டரேட் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட இரண்டு தனித்தனி அறிவிப்புகளின்படி,

கோவ்ரிக், மாநில இரகசியங்கள் மற்றும் உளவுத்துறையை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படுகிறார். அதேநேரத்தில் ஸ்பேவர், அரச இரகசியங்களை உளவு பார்த்ததாகவும் சட்டவிரோதமாக வெளிநாட்டுப் படைகளுக்கு வழங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்.

கனடாவின் முன்னாள் தூதர் கோவ்ரிக் மற்றும் கனேடிய தொழிலதிபர் ஸ்பாவர் ஆகியோர், கடந்த 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கனடா-வன்கூவர் பொலிஸார், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கைது செய்தமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கனடா கருதுகின்றது.

ஆனால், இதனைத் தொடர்ந்து மறுத்து வந்த சீனா, தற்போது இவர்கள் இருவரும் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

சீனாவின் நீதிமன்ற அமைப்பு, கம்யூனிஸ்ட் கட்சியால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டவுடன் கிட்டத்தட்ட 100 சதவீதம் தண்டனை உள்ளது என கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.