உறையும் பனியில் இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் சீன வீரர்கள்!

உலகிலேயே சீன இராணுவம் மிகவும் வலிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சீன இராணுவ வீரர்களுக்கு கோடைக்காலம் மட்டுமல்லாது குளிர்காலத்திலும் மிகக் கடுமையான பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.
அப்படியான ஒரு பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுவரும் இராணுவ வீரர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தை பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக காட்சி அளிக்கிறது. காரணம் சீன இராணுவ வீரர்கள் ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் மைனஸ் 30 டிகிரிக்கும் குறைவான பனியில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தனது குளிர்கால பயிற்சி முகாமை தற்போது ரஷ்யாவின் எல்லைப் பகுதியான ஹைஹே பகுதியில் அமைத்து இருக்கிறது. இந்தப் பயிற்சியின்போது வீரர்கள் மேலாடை கூட அணியாமல் உறையும் பனியில் அயாசமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் பனியை அப்படியே எடுத்து உடம்பின்மேல் அப்பிக் கொள்கின்றனர். இதுகுறித்த புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவே முடியாத பனியில் வீரர்கள் தற்போது துப்பாக்கிச் சூடு பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு பனிக்கொட்டும் வேளையில் பயிற்சி மேற்கொண்டால் வீரர்களின் விழிப்படலங்கள் பாதிக்கப் படுவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் பனியில் சீன வீரர்கள் அலட்டிக் கொள்ளாமல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காரணம் சீனாவின் எல்லைப்பகுதி பல நாடுகளோடு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவைத் தவிர நேபாளம், பாகிஸ்தான், வட கொரியா மங்கோலியா, பூடான் எனப் பல நாடுகளோடு தனது எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டு வருகிறது. இந்த எல்லை நாடுகள் பெரும்பாலும் பனிப்பொழிவு உள்ள நாடுகளாகவே இருக்கிறது. இந்த காரணத்தினால் சீன வீரர்கள் பெரும்பாலும் கோடைப் பருவங்களைவிட குளிர்கால இராவணு பயிற்சிகளில் அதிகமாகக் கலந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லைப் பகுதியைக் குறித்து பல்வேறு தொடர் சிக்கல்கள் இருந்துவரும் நிலையில் சீன இராணுவம் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சீன இராணுவம் குளிர் காலப் பயிற்சியை மேற்கொள்வது இயல்புதான். ஆனாலும் தற்போது எல்லைப் பகுதியில் நிலவும் சிக்கல்கள் உலகம் முழுவதுமே பரபரப்பாக பார்க்கப்பட்டு வரும் விவகாரமாக மாறியிருக்கிறது. இதனால் சீன வீரர்களின் இராணுவப் பயிற்சியும் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.