சீனாவின் கொரோனா தடுப்பூசி - இராணுவ வீரர்களுக்கு பயன்படுத்தி சோதனை!!

சீனாவின் இராணுவ மருத்து அகாடமியின் அங்கமான கேன்சினோ நிறுவனமும் பெய்ஜிங்கின் பயோ டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியைத் தற்போது இராணுவ மட்டத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
மேலும் ஓராண்டு காலத்திற்கு இராணுவ வீரர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சீனாவின் இராணுவ பிரிவு என்பது மிகவும் பரந்து பட்டது என்பதால் எந்த அடிப்படையில் இந்த மருந்து பயன்படுத்தப் படும் என்பதைக் குறித்த தெளிவான விளக்கங்கள் இன்னும் வெளியாக வில்லை.

சீன இராணுவ ஆராய்ச்சி கேன்சினோ நிறுவனமும் பெய்ஜிங்கின் பயோ டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி ஜுன் 25 ஆம் தேதி முதலே பயன்படுத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 5 மாதங்களாக உலகத்தையே சின்னா பின்னமாக்கி இருக்கிறது. இந்நிலையில் கொரேனா தடுப்பூசி மட்டுமே இறுதி முடிவாக மக்கள் கருதுகின்றனர். இதுவரை உலகம் முழுவதும் 17 கொரோனா தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான சோதனைக்கு வந்துவிட்டது என உலகச் சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இதைத்தவிர 200க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. சீனாவின் இராணுவத்தினருக்கு பயன்படுத்தப் படவுள்ள கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட ஆய்வுநிலையில் உள்ளது எனவும் கேன்சினோ நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. இது இரண்டாம் கட்ட சோதனையே தவிர இறுதியான கொரோனா தடுப்பு மருந்து என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை எனவும் அந்நிறுவனம் தகவல் கூறியுள்ளது. அமெரிக்காவின் மாடர்னா, சயோபி, ஆக்ஸ்போர்ட்டு பல்கலைகக் கழகம், பிரிட்டன், ஜெர்மன், இத்தாலி எனப் பல நாடுகளிலும் இறுதிக்கட்ட மருந்து சோதனை நடத்தப் படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் வணிகச் சந்தைக்கு இதுவரை எந்த மருந்துகளும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.