பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா!!
இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலக பிரமுகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறிய இசைஞானி இளையராஜா அவர்கள், ரசிகர்களின் ஒவ்வொருவரின் வீட்டிற்கே வரவிருப்பதாக அறிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றில் கூறியதாவது.
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்த கொரோனா காலகட்டம் தடுக்கின்றது. இருந்தாலும் உங்கள் அன்பு உள்ளங்களை நான் மிகவும் நன்றாக அறிவேன். உங்களுடனேயே இசை வடிவில் நான் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனக்கும் நன்றாக தெரியும். எந்த நிமிடம் ஆனாலும் சரி எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் சரி என்னுடைய இசை உங்களுடனே தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கும் என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
இசை வடிவில் மட்டும் வந்தால் போதுமா? நான் நேரில் வர வேண்டாமா? உங்களிடத்திற்கு உங்கள் இல்லம் தேடி நானே நேரடியாக வருகிறேன் இசை ஓடிடி மூலமாக. இசை ஓடிடி என்பதை புதிதாக தொடங்கவிருக்கின்றேன் என்பதை இந்த பிறந்த நாளில் நான் சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த இசை ஓடிடியில் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது என்ற அரிய விஷயங்களையும், ஒவ்வொரு பாடலின்போது நிகழ்ந்த சுவாரஸ்மான சம்பவங்களையும், அதில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதையும் அதை பதிவு செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டு உழைத்தோம் என்பது பற்றியும் நாங்கள் சொல்லவிருக்கின்றோம்.
இதுபோன்ற தகவல்களை நீங்கள் வேறு எந்த சேனல்களிலும் கேட்க முடியாத தகவல்களை தாங்கி வருகிறது இசை ஓடிடி. மேலும் உலக மாபெரும் இசை மேதைகள் தங்களுடைய அனுபவங்களின் மூலமாக அவர்கள் உணர்ந்ததும் என்னைப் பற்றி அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இதில் பங்கு பெற்று அவர்களும் அவர்களுடைய அனுபவங்களின் மூலமாக உங்களுக்கு சுவராஸ்யமான தகவல்களை அளிக்க காத்திருக்கின்றார்கள். இதெல்லாம் உங்கள் வீடு தேடி விரைவில் வருகிறது. இந்த இசை ஓடிடிக்காக காத்திருங்கள். காத்திருந்தாலும் அது வீண் போகாது என்பதை நான் இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இசைஞானி இளையராஜா அந்த வீடீயோவில் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)