யாழில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்!!

யாழ். இணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.


தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தலையில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வாள்வெட்டுச் சம்பவமாக மாறியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைக்காலைச் சேர்ந்த குழுவொன்று மற்றொரு குழுவுக்கு நேற்று முன்தினம் தாக்கியுள்ளது. அதற்குப் பழிதீர்க்கும் வகையில் நேற்று காரைக்காலைச் சேர்ந்த குழு மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.