ஜோர்ஜ் பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரி ஜமைக்காவிலும் போராட்டம்!
உயிரிழந்த ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரி நடத்தப்படும் போராட்டங்களுக்கு சர்வதேச ஆதரவினை வலியுறுத்தி ஜமைக்காவைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மினொசெட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்தில் பொலிஸாரினால் விசாரணைகளுக்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிலோய்ட், பொலிஸாரின் அத்துமீறலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, குறித்த மரணத்துக்கு நீதிகோரி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜமைக்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பு ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பினத்தவர்கள் வாழ்வது சவாலானது என்பதை வெளிப்படுத்தும் பதாதைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
மேலும் கறுப்பு நிறைத்திலான ஆடைகளை அணிந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்ஜ் பிலோய்ட் மற்றும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட ஜமைக்காவைச் சேர்ந்தவர்களுக்கான நீதியை கோரினர்.
இதேவேளை குறித்த போராட்டமானது அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், குறித்த போராட்ட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்புவதை போலீசார் அவதானித்தவண்ணம் இருந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2000 ஆண்டும் முதல் ஏறக்குறைய 3000 ஜமைக்கா பிரஜைகள் சட்ட ஒழுங்கு அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)