இரண்டரை அடி நீளமுள்ள சிறுத்தை சடலமாக மீட்பு!!

ஹப்புத்தளை "கெல்பன்" பெருந்தோட்ட தேயிலைப் புதருக்குள்ளிருந்து இரண்டரை அடி நீளமுள்ள சிறுத்தையொன்றை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


இன்று பிற்பகல் சிறுத்தை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்க்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றையடுத்தே, அவர்கள் குறித்த தோட்டத்திற்கு விரைந்து, சிறுத்தைப்புலியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதையடுத்து சிறுத்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்நிலையில் குறித்த சிறுத்தை எவ்வாறு இறந்ததென்பதை அறிய தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.