பலாலியில் உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே தற்காலிக பொலிஸ் நிலையம் அமைப்பு!!

பலாலி பொலிஸ் நிலையம் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே சேவையை ஆரம்பித்தது


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பலாலி பொலிஸ் நிலைய சேவைகளை பிரிவு மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே வளலாய் அந்தோணிபுரத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் வழிகாட்டலில் பலாலி பொலிஸ் நிலைய நடமாடும் பொலிஸ் பிரிவு என்ற திட்டத்தின் கீழ் பொலிஸ் சேவைகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பலாலி பொலிஸ் நிலையம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது. அதனால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அச்சுவேலி, காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையங்களில் என பொலிஸ் சேவைகளைப் பெற்று வந்தனர்.

இந்த நிலையில் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்ற விடயம் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.