கொரோனாவில் இருந்து குணமாகிய குழந்தைகள் - ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடத்தி வரும் டிரஸ்டில் இருக்கும் குழந்தைகள் சிலருக்கு கொரோனா பாதித்ததாக செய்திகள் வெளிவந்தது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் குணம் ஆகி விட்டதாகவும் அவர்கள் மீண்டும் டிரஸ்டுக்கு வந்துவிட்டதாகவும் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் மிக வேகமாக கொரோனாவில் இருந்து குணமாக உதவி செய்த அமைச்சர் வேலுமணி அவர்களுக்கும், சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை செய்த மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார் மேலும் இந்த குழந்தைகள் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கானவர்களுக்கும் தனது நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.