கொவிட்-19 - ரஷ்யாவில் குறைவடையும் பாதிப்பு!!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவது குறைந்து வருவதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதன்படி, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு (5,841பேர்) பிறகு கடந்த 24 மணித்தியாலத்தில், குறைந்த வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 6,693பேர் பாதிப்படைந்ததோடு, 154பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதற்மைய, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த இரண்டாவது நாடான ரஷ்யாவில் இதுவரை 6 இலட்சத்து 47 ஆயிரத்து 849பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 320ஆக உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 225,879பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 412,650பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.