கணேஷ்-ராஜலட்சுமி புதிய வீட்டில் குடிபுகுந்தனர்!!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி. விஜய் டிவியில் கிடைத்த புகழுக்கு பின் இருவரும் சேர்ந்து உலகம் முழுவதும் பல நாடுகளில் மேடை நிகழ்ச்சிகளில் பாடி புகழ் பெற்றனர். இந்த நிலையில் சிலஒரு திரைப்படங்களிலும் செந்தில் கணேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் செந்தில் கணேஷ் தனது சொந்த கிராமத்தில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். கடந்த சில மாதங்களாக தானே நேரில் இருந்து பார்த்து பார்த்து கட்டிய சொந்த வீட்டின் கிரகபிரவேசத்தை தற்போது நடத்தியுள்ளனர். லாக்டவுன் நேரம் என்பதல் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியினர் இந்த கிரகபிரவேசத்தை நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அளித்து நடத்தியுள்ளனர்.

செந்தில்கணேஷ்-ராஜலட்சுமியின் புதிய வீட்டில் கணபதி ஹோமம் செய்து உறவினர்களுக்கு அழைப்பு கொடுத்த நடத்திய கிரகப்பிரவேசம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.