வெட்டுக்கிளிகளை அழிக்கும் கிருமிநாசினியை கண்டுபிடிக்குமாறு பணிப்புரை!

குருநாகல் மாவட்டத்தில் பரவி வரும் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான கிருமிநாசினியை உடன் கண்டுப்பிடிக்குமாறு பேராதெனிய விவசாய ஆராய்ச்சி நிலையத்திடம் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.டபிள்யூ. வீரகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.


குருநாகல் மாவத்தகம பகுதியில் கடந்த சில நாட்களாக ஒருவகை வெட்டிக்கிளிகள் பயிர்களை நாசம்செய்து வருகின்றன.

இந்த வெட்டுக்கிளி தாக்கத்தினால் தென்னை, வாழை, சோளம், மரவள்ளி, மற்றும் பப்பாசி போன்ற பயிர்கள் அழிந்து வருகின்றன.

வடமேல் மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் டபிள்யூ. ஏ. சிலரத்ன திணைக்கள உயர் அதிகாரிகளுடன் அப்பிரதேசத்திற்கு நேரடி விஜயம் சென்று கண்காணித்தார்.

இதனையடுத்து வெட்டுக்கிளியை அழிப்பதற்காக ஒரு வகை கிருமிநாசினி தெளிளிக்கப்பட்டது. எனினும் அந்த வெட்டுக்கிளிகள் இறக்காமல் உயிருடன் இருந்தது அவதானிக்கப்பட்டன.

அத்துடன் வெட்டுக்கிளிகள் சில பிடிக்கப்பட்டு பேராதெனிய விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளன.

இதேவேளை இந்தியாவில் பல மாநிலங்களில் ஒரு வகை வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை அம் மாநிலங்கள் துரிதமாக எடுத்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் தற்போது இலங்கையில் பரவி உள்ள வெட்டுக்கிளிகளை இந்நியாவிற்கு அனுப்பி பரிசோதனை நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெட்டுக்கிளிகளை உடன் அழிக்காவிடின் ஒரு சில நாட்களில் இவை 500 மடங்காக பெருகி விடும் என வடமேல் மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் தென்னாபிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா, உகண்டா மற்றும் தன்சானியா போன்ற நாடுகளில் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் பயிர்கள் அழிந்து அந்நாடுகள் பெரும் பஞ்சத்தை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.