விக்ரம்-துருவ் விக்ரம் இணைகின்றார்களா!!

சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ’கோப்ரா’ என்ற திரைப்படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஒரு முக்கிய கேரக்டர் நடிக்கவிருப்பதாகவும், முதன்முதலாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் என்ற படத்தில் இருவருக்குமே சம அளவிலான மாஸ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் விக்ரம், மற்றும் துரு விக்ரம் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது

தமிழ் சினிமாவின் தந்தை-மகன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது புதிதல்ல. ஏற்கனவே சிவாஜி கணேசன் - பிரபு, சிவகுமார் - சூர்யா, சத்யராஜ் - சிபிராஜ் உள்பட பல தந்தை மகன் நடிகர்கள் ஒரே படத்தில் நடித்துள்ளனர். அந்த வரிசையில் விக்ரம் - துருவ் விக்ரம் திரையிலும் வெற்றிகரமாக வலம் வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.