இனங்களின் துரோகி கருணா- விமல்!!

கருணா அம்மான் இராணுவத்தினரை படுகொலை செய்ததாக நிகழ்த்தியிருந்த உரை மட்டமானது என அமைச்சர் விமல் வீரவன்ச சாடியுள்ளார்.


அத்துடன், தான் செய்த கொலைகளை சொல்லிப் பெருமைப்படும் ஒருவர் எந்தவோர் இனத்துக்கும் அவசியமற்றவர் என்றும் அவர், இனங்களின் துரோகி எனவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

மேலும் , எந்தவொரு பயங்கரவாத அமைப்பிலிருந்த நபருக்கும் அந்த அமைப்பிலிருந்து விலகியிருக்கவும், பயங்கராவாத கொள்கைகளை கைவிட்டுச்​ செயற்படவும் அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் செயலாளரான டில்வின் சில்வா தனது தோள் மீது ஆயுதங்களை சுமந்து சென்ற போதே வாத்துவ ரயில் நிலையத்தில் வைத்து இராணுத்தினரால் பிடிக்கப்பட்டார் என்றும், அதனால் தற்போதும் டில்வின் சில்வாவுக்கு அரசியல் செய்ய அதிகாரமில்லை எனக் கூறமுடியாது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.