முதன்முறையாக அமெரிக்க வரலாற்றில் கடற்படையில் கறுப்பின பெண் விமானி!!

அமெரிக்க கடற்படை விமான பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் இந்தமாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்“ என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தை பெறுவார் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

வேர்ஜீனியா மாகாணம் பர்க் நகரைச் சேர்ந்த மேட்லைன் ஸ்வெகிள் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்றார்.

அதனை தொடர்ந்து 3 ஆண்டு கால தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர் போர் விமானத்தின் விமானியாக தேர்வு செய்யப்பட்டார். அத்தோடு டெக்சாஸின் கிங்ஸ்வில்லில் உள்ள ரெட்ஹாக்ஸ் ஆஃப் பயிற்சிப் படை 21 க்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018 இல் ஒரு மிலிட்டரி.காம் விசாரணையின்படி, கடற்படை விமானத்தில் வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

எப் / ஏ -18 ஐ ரக வானூர்தியை பறக்கவிட்ட 1,404 பேரில் 26 கறுப்பு விமானிகள் மட்டுமே இருந்தனர் மற்றும் ஜெட் தளங்களில் இருந்த அனைத்து விமானிகளிலும் 2% சதவீதத்திற்கும் குறைவானவர்கள் கறுப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.