ஒரே நாளில் இத்தனை பேருக்கா?-அதிச்சியில் உலக சுகாதார அமைப்பு!!

உலக சுகாதார அமைப்பு (WHO) சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,59,848 புதிய கொரோனா வழக்குகள் WHO-ல் பதிவாகியுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுாகதார அமைப்பில் உலகளவில் பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 13.8 மில்லியன் ஆகும்.
புதிதாக பதிவான வழக்குகளின் அதிகரிப்பு 24 மணி நேரத்திற்குள் WHO-க்கு அறிவிக்கப்பட்ட அதிகமான எண்ணிக்கையாகும்.
முன்னதாக வெள்ளிக்கிழமை 2,37,743 புதிய வழக்குள் பதிவானதே 24 மணிநேரத்திற்குள் WHO-க்கு அறிவிக்கப்பட்ட அதிகமான எண்ணிக்கையாக இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் WHO-க்கு 7,360 கூடுதல் கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக சனிக்கிழமை அறிக்கை குறிப்பிட்டுள்ளது, உலகளவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,93,087 ஆக அதிகரித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.