கண்டி உயர்பாதுகாப்பு வலயத்தை ட்ரோன் மூலம் படம்பிடித்த வெளிநாட்டுநபர் கைது!!

கண்டி உயர் பாதுகாப்பு வலயத்தை ட்ரோன் மூலம் படம்பிடித்த சந்தேகத்தில் 35 வயதுடைய உக்ரேனிய பிரஜை ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கண்டி தலதா மாளிகைக்கு எதிரே உயரமான ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த குறித்த நபர் நேற்று இரவு ஆலயம், ஜனாதிபதி மாளிகை மற்றும் பிற முக்கிய இடங்களை படம்பிடிக்க ட்ரோனை இயக்கியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தலதா மாளிகை மற்றும் ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது ட்ரோனின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், இயந்திரத்தைத் தேடுவதற்காக ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில் வந்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்திருந்தார்.

சந்தேக நபரின் ஹோட்டல் அறையை பொலிசார் பரிசோதித்ததில் ஒரு உயர் தொழில்நுட்ப ட்ரோன் இருப்பது தெரியவந்தது. அத்டுடன் அதன் கட்டுப்பாட்டை இயக்குபவர் இழந்தாலும், தன்னியக்கமாகவே புறப்பட்ட இடத்தை அது வந்தடையும் தொழில்நுட்பமுடையது எனவும் கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பாஸ்போர்ட் அல்லது செல்லுபடியாகும் விசா வைத்திருக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் அவர் அதை மத்தறை, வெலிகமவில் ஒரு நண்பருடைய வீட்டில் விட்டுவிட்டதாக பொலிசாருக்கு தகவல் கொடுத்திருந்தார்.

இதேவேளை சந்தேக நபர் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

ட்ரோன் எடுத்த படங்களை சந்தேகநபர் சேமித்து வைக்க பயன்படுத்திய மடிக்கணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை விசாரிக்க குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் இலங்கை விமானப்படையின் உதவியை பொலிசார் பெற்றுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.