அரசியல் விழிப்புணர்வு

நடைமுறைச் சாத்தியமான யதார்த்தமான தீர்வு என்று அடிக்கடி பலர் கூவுகின்றனர்.
அது என்ன தீர்வு என்று கேட்டால் பதில் இல்லை.


நீலன் என்ன தீர்வை முன்வைத்தார் என்றால் விடை வராது...

ஒஸ்லோ தீர்மானத்திற்கு மாற்றாக இடைக்கால நிர்வாக அதிகாரசபை குறித்த வரைபை புலிகள் முன்வைத்தமை குறித்து இவர்கள் மௌனமாக இருப்பார்கள்...

தற்போதைய புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால வரைபில் மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சியே உள்ளதாக சட்ட அறிஞர்களும் அரசியல் அறிஞர்களும் கூறிவரும் நிலையில் சுமந்திரனும் அவரது பக்தர்களுமே அந்த வரைபில் கூட்டாட்சி உள்ளதாக கூறுகிறார்கள்.

ஒற்றையாட்சி முறைமையே நடைமுறையில் சாத்தியமானது, யதார்த்தமானது என இவர்கள் கருதினால் அதை நேரடியாக தெளிவாக மக்களிடம் கூறவேண்டும். மக்கள் முடிவை எடுக்கட்டும்.

ஆனால் ஒற்றையாட்சியை கூட்டாட்சி (சமஷ்டி) என ஏமாற்றி மக்களின் ஆதரவை பெறுவது அரசியல் அயோக்கியத்தனம்.

சரி. ஒற்றையாட்சி போதும் என மக்கள் நினைத்தால் அரசியலில் கூட்டமைப்பு தேவையில்லை. ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி போதுமானது. இடையில் தரகர்கள் எதற்கு?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டதாரிகள்( சுமந்திரன் ஆதரவு) சிலரது  கருத்துகள் கேற்கப்பட்டிருந்தன.

" எங்களுக்கு ஒற்றையாட்சி போதும். ஆனால் சனம் அதை ஏற்காது. அதனால் அதை நாங்கள் சமஷ்டி என்ற பெயரில் கொடுக்கவேண்டும். நீங்கள் அதை குழப்ப வேண்டாம் " என்ற வகையில் அவர்களது கருத்துகள் இருந்தன.

எனவே ஆசனங்களை கைப்பற்றும் முனைப்புகளை இரண்டாம் நிலைக்குத்தள்ளி மக்களை தெளிவுபடுத்தும் அரசியல் விழிப்புணர்வு நோக்கி நகரவேண்டியது உடனடித் தேவை.

#அரசியல்விழிப்புணர்வு
Blogger இயக்குவது.