நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாராகும் அமெரிக்க வேட்பாளர்கள்!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் செப்டம்பர் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதியாகவுள்ள டெனால்ட் ட்ரம்ப்பின் பதவி காலம் நிறைவடையவுள்ளது. கொரோனா பரவல் அமெரிக்காவில் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய அமெரிக்கர்கள் தயாராகி வருகின்றனர்.

தற்போது குடியரசுக் கட்சி சார்பில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் களமிறங்குகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தேர்தலையொட்டி ஜனாதிபதி வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் நடத்தவுள்ளனர். இதற்காக இருவரும் நடத்தும் முதல் விவாதம் செப்டம்பர் 29ஆம் திகதி ஒஹிகோ மாகாணத்தில் க்ளைவ் லாண்டிலும் ஒக்டோபர் 15ஆம் திகதி புளோரிடாவிலும் ஒக்டோபர் 22ஆம் திகதி டென்னிசி மாகாணத்திலும்  இடம்பெறவுள்ளன.

இந்த விவாதத்தில் முதன்முறையாக ட்ரம்ப், ஜோபிடன் ஆகியோர் நேருக்கு நேராக சந்தித்து விவாதிக்கின்றனர். இதன்போது, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் செயற்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விளக்குகின்றனர்.

தேர்தல் முடிவுகளில், அதிக சதவீத வாக்குகளைப் பெற்றவரே அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.