யாழ்ப்பாண இளைஞன் தமிழகத்தில் கைது!!
தமிழகத்தின் இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இருக்கும் வலசாய் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனியாக நின்று கொண்டிருந்த சுமார் 24 வயது மதிக்கத்தக்க இளைஞரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் விசாரித்தனர்.
அப்போது அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததால், பொலிசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று முழு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த இளைஞனின் பெயர் துஷாந்தன் எனவும், இவரின் தந்தை பெயர் ரவிச்சந்திரன் இலங்கை யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்பதும் தெரியவந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் திகதி சென்னைக்கு வந்திறங்கிய இவர், அங்கு மதுரவாயிலில் இருக்கும் தன்னுடைய அத்தை விட்டிற்கு சென்றுள்ளார்.
சுமார் அங்கு ஒரு மாதம் தங்கிய பின்னர், காங்கேயத்தில் இருக்கும் அகதி முகாமில் வசித்து வரும் சத்ரியன் என்பவரின் மனைவி சகோதரி சலோமியை சந்தித்து, அதன் பின் அங்கிருந்து திருவண்ணாமல் மாவாட்டத்தில் இருக்கும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சுமார் 15 நாட்கள் தங்கியிருந்த அவர், கடந்த வாரம் தூத்துக்குடிக்கு சென்ற லொரி ஒன்றில் ஏறி மதுரைக்கு சென்றிருக்கிறார்.
அதன் பின், அங்கு அவர் தனது பாஸ்போர்ட் மற்றும் பிற பொருட்களை அழித்துவிட்டு, சனிக்கிழமை இரவு இராமேஸ்வரத்தின் பம்பனை அடைந்து, அதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் நின்றுள்ளார்.
இவர் தங்கச்சிமடத்தில் இருந்து, சட்டவிரோதமாக வீடு திரும்ப திட்டமிட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதனால் மேலதிகார விசாரணைக்காக க்யூ கிளையில் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விவரங்களை சரிபார்க்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த நபர் தனது பாஸ்போர்ட்டை ஏன் அழித்துவிட்டார் என்று கேட்டபோது சரியான விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை