நீர்த்தேக்கத்திற்குள் பேருந்து மூழ்கி சீனாவில் விபத்து!!
தென் மேற்கு சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டுவிலகி, அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 18 பேரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளான பேருந்தும் மீட்புப்பணியாளர்களினால் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கான கரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo