இலங்கையில் இதுவரை 2094 பேருக்கு கொரோனா


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2094 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம்(08) 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், சவுதி அரேபியா மற்றும் ஈரானிலிருந்து வந்தவர்களே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 1,967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Blogger இயக்குவது.