மும்பையின் தாராவி குடிசைப் பகுதி வைரஸை வென்றது எப்படி!!

கொரோனா வைரஸ் உடனான போரில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியுடன் பல உலக நாடுகள் முயன்று வருகின்றன.

இந்த நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதிதான் முதல் கொரோனா கேஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதே நாளில் அங்கு கொரோனா காரணமாக மரணமும் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய பாதிப்பு வேகமாக வேகமாக அதிகரித்தது.
மும்பை போன்ற பெருநகரங்கள் கூட கொரோனாவிற்கு எதிராக திணறிய நிலையில் தாராவி மிக மோசமாக கொரோனாவிற்கு பாதிப்பு அடையும் என்றே கருதப்பட்டது.
முதலில் அங்கு பலிகா நகர் என்று மக்கள் குறைவாக வசிக்கும் இடத்தில் கொரோனா வந்தது. ஆனால் போக போக அங்கு கேஸ்கள் அதிகரித்து முகுந்த் நகர் போன்ற அதிக நெருக்கடியாக குடிசை பகுதியிலும் கூட கொரோனா வந்தது. 10க்கு 10 வீட்டில் 5-7 பேர் வசிக்கும் நெருக்கடியான இடத்தில் கொரோனா பரவியமை பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக மாநில அரசு அங்கு பணிகளை தொடங்கியது.
அதன்படி அங்கு சாலைகள் எல்லாம் உடனடியாக மூடப்பட்டதுடன் 48 மணி நேரத்தில் தாராவியின் அனைத்து தெருக்களும் மூடப்பட்டது. அங்கு இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் மருந்து அடிக்கப்பட்டது. 425 பொது கழிப்பிடங்கள் மொத்தமாக சுத்தப்படுத்தப்பட்டது. வீடு வீடாக சோதனையை தொடங்கிய அரசு ,முதல் கட்டமாக தாராவியை வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தியது.
தாராவியில் மொத்தம் 8.5 லட்சம் பேர் அங்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்று screening செய்யப்பட்டார்கள். இதற்காக பெரிய அளவில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக சோதனைகளை செய்தனர். அதேபோல் இதற்காக அங்கு 350 தனியார் மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் களமிறக்கட்டது.
இதன்போது கொரோனா சோதனைகள் அறிகுறி இருக்கும் எல்லோருக்கும் செய்யப்பட்டது. அதேபோல் கொரோனா உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்ட எல்லோருக்கும் சோதனை செய்யப்பட்டது. அத்துடன் இந்த கொரோனா அறிகுறி இல்லாமல் பரவ கூடியது என்பதனால் அறிகுறி இல்லாத பல நபர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது.
கொரோனா உள்ளவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள். கொரோனா உள்ளவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் மட்டும்தான் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்படி தனிமைப்படுத்தப்பட்ட எல்லோரும் முறையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காணுதல். டெஸ்ட் செய்து உடனே முடிவுகளை வெளியிடுதல். மக்களை தனிமைப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பது, என்று அரசு அணு துரிதமாக செயல்பட்டது .
அதிலும் அங்கு காண்டாக்ட் டிரேசிங் செய்வதில் தாராவி நிர்வாகம் மிக தீவிரமாக கவனம் செலுத்தியது. இந்த கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு நான்கு முதல் 5 அடக்கு காண்டாக்ட் ட்ரெஸிங் கூட செய்யப்பட்டது. இதற்கு அப் பகுதி மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
தாராவி 2400 சதுர கிலோ மீட்டர் பகுதிக்கு இருக்கும் மிகப்பெரிய குடிசை பகுதி ஆகும் இது . அங்கு கொரோனா மோசமாக வரும் என்று நினைக்கப்பட்ட நிலையில் மொத்தமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு போராடியதால் தான் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி சத்தமே இல்லாமல் கொரோனாவை வென்று இருக்கிறது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை பார்த்து ஒடுங்கி வரும் நிலையில் அமைதியாக தாராவி கொரோனாவை ஒடுக்கி உள்ளமை உலக நாடுகளிடையே பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.