மீண்டும் பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் அறிவிப்பு!!
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கலந்துரையாடியிருந்தது.
இந்நிலையில், அதற்குரிய பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2019 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்கும் காலம் ஜுலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo