பிரான்ஸில் அணு மின் நிலையத்தில் பணிபுரிந்த 23 பேருக்கு கொரோனா தொற்று!!

பிரான்ஸில், பெல்லிவில்-சுர்-லோயர் (Belleville-sur-Loire) அணு மின் நிலையத்தில் பணிபுரிந்த, 23 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் இங்கு பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிராந்திய சுகாதார நிலையம் இதுவரை 523 பேருக்கு வைரஸ் தொற்று சோதனை மேற்கொண்டுள்ளது. அவர்களில் 23 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கேனும் அறிகுறிகள் தென்படவில்லை என அறிய முடிகிறது.
உறுதி செய்யப்பட்ட அனைவரும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மீதமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.