2 ஆம்நாளாக உண்ணாவிரத போராட்டம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம்:  2 ஆம்நாளாக உண்ணாவிரத போராட்டம்.


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கா கூடாது என  கோரி  கொழும்பு துறைமுகத்தின் 3 ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் இன்று (02) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த  கிழக்கு முனையத்தினை  துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். .

இதற்காக அண்மையில் சீனாவில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 3 பளுதூக்கிகளில் ஒன்றின் மீது ஏறியே இவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

கடந்த அரசாங்க காலத்தில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 பளுதூக்கிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இந்த பழுதூக்கிகளை கிழக்கு முனையத்தில் பொருத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

துறைமுகத்தின் கிழக்கு முனையம் பாரிய கப்பல்களை நங்கூரமிடக்கூடிய ஆழமான  பகுதியாகும்.  கடந்த அரசாங்கம் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை கூட்டுத் திட்டமாக கிழக்கு முனையத்தை நடத்திச் செல்வதற்கு பிரேரித்தது. எனினும், இந்த முனையம் எமக்குரியதாகக் காணப்பட வேண்டும் என துறைமுக தொழிற்சங்கங்கள் பாகுபாடின்றி கூறுகின்றன.

இது இல்லாமற்போனால், துறைமுகங்கள் அதிகார சபை வலுவிழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு #தெற்கு துறைமுகம் Colombo International Container Terminals என அழைக்கப்படுவதுடன், அதன் பெருவாரியான பங்கு #சீனா வசமுள்ளது. அதன்படி, கொழும்பு துறைமுகத்தில் பல கப்பல்களை நிறுத்தி பணிகளை மேற்கொள்வதற்கான பகுதியொன்று துறைமுக அதிகார சபைக்கு இல்லை.

இதனால் கிழக்கு துறைமுகத்தை இந்தியாவிடம் வழங்காது  துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். .
Blogger இயக்குவது.