இந்திய இராணுவத்திற்கு அதிநவீன ஆளில்லா விமானங்கள்!
‘பாரத்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தயாரித்து வழங்கியுள்ளது.
இந்தியா – சீனா இடையே நீண்ட நிலப்பரப்பு எல்லை காணப்படுகிறது. அதில் முக்கியமாக இமயமலை, லடாக் போன்ற கடும் பனிப்பொழிவான இடங்களும் காணப்படுகின்றன.
இந்நிலையில், பனி காலநிலையைப் பயன்படுத்தி சீன இராணுவம் இந்திய எல்லையைத் தாண்டி ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை அவ்வப்போது முன்னெடுத்துவருகிறது. இவ்வாறு, லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் நடைபெற்ற மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்தனர்.
இதையடுத்து. பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சீனா இராணுவம் தனது எல்லைக்குத் திரும்பியுள்ளது. ஆனாலும் சில இடங்களில் பின்வாங்கல் முழுமையாக இடம்பெறவில்லை என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்திய இராணுவம் எல்லைப் பகுதியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக தற்போது துல்லியமாகக் கண்காணிக்கக்கூடிய அதிநவீன ஆளில்லா விமானங்கள் எல்லை பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை