இலங்கை கோடீஸ்வரர்களிடம் விசாரணை!

இலங்கையில் திடீரென கோடீஸ்வரராகிய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தவறான முறையில் பணம் சேகரித்த நபர்கள், போதை வர்த்தகர்கள் மற்றும் திடீரென பணக்காரர்களாகிய வர்த்தகர்கள் தொடர்பில் இரகசிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு பிரதானி தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையில் திடீரென சொத்துக்கள் சேகரித்த நபர்கள் தொடர்பில் இரகசிய அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள், ஆயுத வர்த்தகர்கள், பயங்கரவாத செயல்கள், சைபர் மோசடியாளர்கள், இலஞ்சம் பெறுபவர்கள், உட்பட மோசடியான முறையில் பணம் சேகரித்த நபர்கள் தொடர்பில் பொலிஸ் பிரிவில் பல தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது.
பொலிஸ் விசேட பிரிவிற்கு மேலதிகமாக அரச புலனாய்வு பிரிவினர், முப்படை புலனாய்வு பிரிவினால் குறித்த அறிக்கையை சேகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.