ஆடுகளைக் கொன்றது புலி - யாழில் சம்பவம்!!
யாழ்ப்பாணம் மாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தைப் புலி கடிதத்தில் 13 ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவை கலட்டிப் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளை கடித்துள்ளன.
இதில் 13ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்துள்ளன. எனினும் சிறுத்தை தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo